close
Choose your channels
anabel
friendship

சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர் இல்லை: நடிகை கஸ்தூரி

Saturday, July 3, 2021 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் கேள்விக்கு அப்பாற்பட்டவராக இருப்பவர் என்று நான் நினைக்கவில்லை என்று நடிகை கஸ்தூரி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகை கஸ்தூரி சமீபத்தில் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து டுவிட்டரில் கேட்ட கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ரஜினிகாந்தின் உடல்நிலைக்கு என்ன? என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்ட கேள்விதான் அது என்றும், கேள்வி கேட்ட முறை தவறாக இருக்கலாம், ஆனால் அந்த கேள்வி தனது மனதில் எழுந்த கேள்வி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் உட்கார்ந்தாலும், நின்றாலும், நடந்தாலும், அமெரிக்கா சென்றாலும் செய்தியாகிறது என்றும், அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றும், அவர் சூப்பர் ஸ்டாராக இருப்பதால் அவர் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர் என்று நான் கருதவில்லை என்றும் கூறினார்.

மேலும் ரஜினிகாந்தின் உடல்நிலைக்கு என்ன என்பதை தெரிந்து கொள்வதில் ஒவ்வொரு ரசிகருக்கும் ஆர்வம் இருக்கிறது என்றும், ரஜினிகாந்த் உடலுக்கு என்ன? என்று கேள்வி கேட்பது தவறு என்று யாரும் சொல்ல முடியாது’ என்றும் நடிகை கஸ்தூரி அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த பேட்டியின் முழு வீடியோ இதோ:

Get Breaking News Alerts From IndiaGlitz