கொரோனாவுக்கு பலியான இன்னொரு தமிழ் நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த சில மாதங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து தமிழக அரசு இன்று முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனாவால் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் பலியாகி வருகின்றனர். சமீபத்தில் இயக்குனர் தாமிரா, இயக்குநர் கேவி ஆனந்த், இயக்குனர் எஸ்பி ஜனநாதன் உள்பட ஒரு சிலர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் கொரோனாவால் பலியாகி உள்ளார்.
அவதார புருஷன், உடன்பிறப்பு, இளைஞரணி, தமிழச்சி, மண்ணை தொட்டு கும்பிடனும் உள்பட பல திரைப்படங்களிலும் கோலங்கள், கேளடி கண்மணி, கஸ்தூரி, வாணி ராணி உள்பட பல சீரியல்களில் நடித்தவர் நடிக்ர் ஜோக்கர் துளசி. இவர் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கொரோனாவால் தொடர்ச்சியாக திரையுலக பிரபலங்கள் பலியாகி வருவது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments