close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

கராத்தே வீராங்கனையின் காலுக்கு உதவி செய்த பிரபல நடிகர்: வைரல் புகைப்படங்கள்!

Saturday, July 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கராத்தே வீராங்கனையின் கால் அறுவை சிகிச்சைக்கு பிரபல நடிகர் உதவி செய்த நிலையில் அவர் தற்போது மீண்டும் கராத்தே போட்டியில் பங்கேற்று தங்கபதக்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

நடிகர் சோனு சூட் பல சமூக சேவைகளை செய்து வருகிறார் என்பதும் அவரது சொத்தின் ஒரு மிகப்பெரிய பகுதியை அவர் சமூக சேவைக்கே செலவு செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக கொரோனா வைரஸ் முதல் அலை மற்றும் இரண்டாவது அலையின்போது அவர் கோடிக்கணக்கில் செலவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கராத்தே வீராங்கனை ஒருவரின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்தது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

மற்றவர்களின் வாழ்க்கையில் நாம் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்தை காணும் போது நம் வாழ்க்கையிலும் மதிப்புக்கு உள்ளாகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்ரிந்த்பால் என்ற கராத்தே வீராங்கனை முழங்கால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலையில் இருந்தார். அப்போது நான் அவரை சந்தித்தேன். அவர் பல கனவுகளுடன் இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது.

இதனையடுத்து அவருடைய கால் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய முடிவு செய்தேன். தற்போது அவர் முழுமையாக குணம் அடைந்து கையில் தங்கப் பதக்கத்துடன் என்னை வந்து சந்தித்தபோது, அவர் மீதான மதிப்பு எனக்கு மேலும் அதிகரித்துள்ளது. அகில இந்திய கராத்தே சாம்பியன் ஆன அம்ரிந்த்பால், எதிராளிக்கு ஒரு மதிப்பெண் கூட தராமல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

விரைவில் பர்மிங்காமில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் போட்டியிலும் இந்தியா சார்பில் அவர் விளையாட உள்ளார் என்பதும் அவர் இந்தியாவை மென்மேலும் பெருமைப்படுத்துவார் என்றும் நான் நம்புகிறேன் என்று நடிகர் சோனுசூட் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் தயாராகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.