close
Choose your channels

அக்சராஹாசனின் அடுத்த பட டைட்டில் இதுதான்: அதிரடி அறிவிப்பு

Monday, September 14, 2020 • தமிழ் Comments

உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் அக்சராஹாசன் ஏற்கனவே அமிதாப், தனுஷ் நடித்த ‘ஷமிதாப்’, அஜித் நடித்த ‘விவேகம்’, விக்ரம் நடித்த ‘கடாரம் கொண்டான்’ நடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் நவீன் இயக்கி வரும் ‘அக்னி சிறகுகள்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அக்சராஹாசன் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளிவந்துள்ளது. ’டிரண்ட் லவுட்’ என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அக்சராஹாசன் முக்கிய வேடத்திலும், அவரது பாட்டியாக பழம்பெரும் பாடகி உஷா உதுப் நடிக்கவிருப்பதாகவும் செய்தி வெளியானது

இந்த நிலையில் இந்த படத்திற்கு தற்போது ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையம்சம் கொண்ட இந்த படத்தை இயக்குனர் ராஜாகிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கவுள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz