எனது முதல் பேபி ஸ்டெப்: கமல் பாணியை கடைபிடிக்கும் பிக்பாஸ் நடிகை!
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இறுதி நாளன்று கமல்ஹாசன் தனது பெயரில் ஒரு கதராடை நிறுவனத்தை ஆரம்பித்து இருப்பதாகவும், தன்னால் முடிந்த அளவு கதராடை நெய்யும் நெசவாளர்களுக்கு உதவி செய்ய போவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அவர் தனது நிறுவனத்தின் லோகோவை அன்றைய தினமே வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் கமலின் அறிவுரையை ஏற்று பலர் கதராடைக்க்கு மாறி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் பாணியில் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான அபிராமி வெங்கடாச்சலம் தனது பெயரில் புதிய ஆடை பிராண்ட் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
இது குறித்த இன்ஸ்டாகிராம் பதிவில் ’எனது முதல் பேபி ஸ்டெப் இது’ என்றும் ’என் பெயரில் ஒரு ஆடை பிராண்ட் வேண்டும் என்று என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் நினைத்ததில்லை’ என்றும் ’உங்கள் அனைவரும் ஆதரவும் தேவை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அபிராமி வெங்கடாசலத்தின் இந்த புதிய முயற்சிக்கு எந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.