close
Choose your channels
PatamPoochi
mayoon

பிரியங்கா கூடவே இருந்து குழி பறிச்சது அபிஷேக் தான் சார்: கமலிடம் இவ்வளவு தைரியமாக சொன்னது யார்?

Saturday, December 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரியங்கா கூடவே இருந்து குழி பறித்தது அபிஷேக் தான் சார் என கமல்ஹாசனிடம் தைரியமாக சொன்ன போட்டியாளரின் வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்று தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் அவர்கள், ‘பிரியங்காவிடம் சொல்ல நினைத்து, சொல்ல முடியாமல் போனதை இப்பொழுது நீங்கள் சொல்லலாம் என அமீரிடம் கேட்க அதற்கு அமீர், ‘பிரியங்கா அபிஷேக்கை நம்பி முழுவதுமாகவே ஸ்பாயில் ஆகிவிட்டார் சார். கூடவே இருந்து சிலபேர் குழி பறிப்பார்கள். நான் என்னுடைய நண்பன் மேல் அக்கறை எடுத்துக் கூறுகிறேன் என்றால் கொஞ்சம் கொஞ்சமாக ஏத்திவிட்டு ஏத்திவிட்டு அவருக்கு கெட்ட பெயர் வாங்கித் தர முயற்சி செய்ய மாட்டேன் என்று கூறினார்.

அப்போது விளக்கமளிக்கும் பிரியங்கா, ‘நான் ஒரு ஸ்ட்ராங்கான போட்டியாளர் சார் என்று கூறும்போது இடைமறித்த கமல்ஹாசன், ‘நான் ஸ்ட்ராங் பிளேயர் என்றும், நான் நல்ல நடிகர் என்பதை அவர்கள் சொல்ல வேண்டுமென ஆடியன்சை காண்பித்து கமல்ஹாசன் கூற, பிரியங்கா மற்றும் அபிஷேக் ஆகிய இருவரது முகங்களும் இறுகிய காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.