close
Choose your channels
DJ
DJ

தமிழ் படத்தின் ரீமேக்கில் அபிஷேக் பச்சன்.. 71 வயது முதியவராக நடிக்கின்றாரா?

Friday, December 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தமிழ் படத்தின் ரீமேக் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

பெண் இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் உருவான ’கேடி என்கிற கருப்பு துரை’ என்ற திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 77 வயது முதியவருக்கும், 8 வயது சிறுவனுக்கும் உள்ள பிணைப்பை மிகவும் அழகாக காட்டும் வகையில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டு இருந்தது.

ராமசாமி என்ற நடிகர் 70 வயது முதியவர் கேரக்டரிலும் நாகா விஷால் என்பவர் எட்டு வயது சிறுவனாகவும் இந்த படத்தில் நடித்து இருந்தனர். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது நாகா விஷாலுக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய தற்போது திட்டமிட்டுள்ள நிலையில் 70 வயது முதியவர் கேரக்டரில் அபிஷேக் பச்சன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் இயக்கிய மதுமிதா ஹிந்தியிலும் இயக்க இருப்பதாகவும் ஹிந்திக்கு தகுந்த மாதிரி திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.