close
Choose your channels
NMM
NMM

ஷிவானியை பாராட்டிய ஆரி: பாலாவுக்கு செக்கா?

Tuesday, December 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 79 நாட்கள் ஆகிவிட்ட போதிலும் இந்த 79 நாட்களிலும் ஷிவானி தனது தனித்திறமையை காண்பிக்காமல் இருப்பதாக பார்வையாளர்கள் மத்தியில் கருத்துக்கள் எழுந்து வருகிறது. நேற்றைய நாமினேஷனின் கூட பெரும்பாலும் ஷிவானியை நாமினேட் செய்தவர்கள் அவர் இன்னும் தனது தனித்திறமையை காண்பிக்கவில்லை என்றும் இந்த வீட்டில் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை என்றும் கூறிவந்தனர்

இந்த நிலையில் நேற்றைய டாஸ்க்கில் ஷிவானி அற்புதமாக விளையாடியதாக ஆரி அவருக்கு பாராட்டு தெரிவிக்கிறார். நேற்றைய கேள்வி பதில் டாஸ்க்கில் முதல் முறையாக நீங்கள் கேட்ட கேள்வியில் உங்களுடைய தனித்தன்மை தெரிந்தது என்றும், உங்களை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன் என்றும் ஆரி கூறினார்

மேலும் யாருடைய ஆதரவும் இல்லாமல் உங்களுடைய முழு கவனத்தையும் விளையாட்டில் செலுத்துங்கள் என்றும் அவர் அறிவுரை கூறுகிறார். பாலாஜியின் பிடியில் ஷிவானி இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவரை தனியாக விளையாட ஆரி ஊக்குவிப்பது பாலாஜிக்கு வைக்கும் செக்கா? என்ற எண்ணமும் பார்வையாளர்கள் மத்தியில் எழுகிறது

மொத்தத்தில் இறுதிப்போட்டி நெருங்க நெருங்க போட்டி கடுமையாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.