close
Choose your channels
IKK
Jail

BMW காரில் ருத்ராஜ், ஆரத்தி எடுத்து வரவேற்கும் குடும்பத்தினர்: வைரல் வீடியோ

Sunday, October 17, 2021 • தமிழ் Comments

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது என்பதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெய்க்வாட் மிக முக்கிய காரணம் என்பதும் அறிந்ததே.

முதல் போட்டியில் இருந்து கடைசி போட்டி வரை அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார் என்பதும், இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டி முடிவடைந்ததை அடுத்து துபாயில் இருந்து தனது சொந்த ஊருக்கு பிஎம்டபிள்யூ காரில் வந்த ருத்ராஜை அவரது குடும்பத்தினரும் அந்த பகுதியில் உள்ளவர்களும் பட்டாசு படத்தில் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக ருத்ராஜ் குடும்பத்தினர் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இது குறித்த வீடியோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவாகியுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் ஐபிஎல் தொடரில் இணை உள்ளதை அடுத்து ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற விதி மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. அவ்வாறு 3 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் விதி அமல்படுத்தப்பட்டால் சென்னை அணியில் தோனி, ஜடேஜா மற்றும் ருத்ராஜ் ஆகிய மூவரும் தக்க வைத்துக் கொள்வார்கள் என சிஎஸ்கே நிர்வாகத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz