close
Choose your channels
DT
BJP

ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த 10 நிமிட பாடல்.. பிரபல நடிகை தகவல்

Saturday, January 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொதுவாக ஒரு பாடல் என்றால் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கும் என்பது தெரிந்ததே. ஆனால் ஜிவி பிரகாஷ் ஒரு திரைப்படத்திற்காக 10 நிமிட பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ளதாக பிரபல நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி’ என்ற தமிழ் படத்தில் நடித்தவரும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையுமான கங்கனா ரனாவத் தற்போது ’எமர்ஜென்சி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் கங்கனா ரணவத், இந்திராகாந்தி கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அனுபம்கெர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் என்பதை கூறியுள்ள கங்கனா ரணாவத் இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் என்றும் அதில் ஒரு பாடல் நீளமான 10 நிமிட பாடல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.