close
Choose your channels

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அறுவை சிகிச்சையா? என்ன ஆச்சு?

Monday, May 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இன்னும் சில நாட்களில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில் அவருக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார் என்பதும் அப்போது அவர் கையில் மாவு கட்டு இருந்ததை பார்த்து அவருக்கு என்ன ஆச்சு என்ன ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர் என்பது தெரிந்தது. மேலும் இந்த ஆண்டு ஐஸ்வர்யா ராய் உடன் அவரது மகளும் சென்றிருந்தார் என்பதும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் அணிந்த காஸ்டியூம் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவை முடித்துவிட்டு தற்போது மும்பை திரும்பியுள்ள ஐஸ்வர்யா ராய் தனது கையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் இன்னும் ஒரு சில தினங்களில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கை எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் அதை முழுமையாக குணப்படுத்த தான் இந்த அறுவை சிகிச்சை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

நடிகை ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ மற்றும் ’பொன்னியின் செல்வன் 2’ ஆகிய இரண்டு படங்களுக்கு பிறகு வேறு திரைப்படங்களில் நடிக்க இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.