close
Choose your channels
NMM
NMM

இளையராஜாவுக்கு ஆயுள் விருத்தி ஹோமபூஜை: எங்கே நடந்தது தெரியுமா?

Tuesday, May 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜாவுக்கு கோவில் ஒன்றில் ஆயுள் விருத்தி ஹோம பூஜை நடைபெற்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் பெரும் சாதனை செய்த இசைஞானி இளையராஜாவுக்கு திருக்கடையூர் கோவிலில் ஆயுள் விருத்தி ஹோமம் பூஜை விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர் என்ற பகுதியில் அபிராமி அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. தருமபுரி ஆதினத்திற்கு சொந்தமான இந்த கோவிலில் தான் மார்க்கண்டேயனுக்காக எமனை காலசம்ஹார மூர்த்தி வதம் செய்த வரலாறு உண்டு. இதனை அடுத்து இந்த கோவிலில் பல பிரபலங்கள் ஆயுள் விருத்தி பூஜை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் 80 வயதான இசைஞானி இளையராஜாவுக்கு, திருக்கடையூர் கோவிலில் ஆயுள் ஹோம விருத்தி பூஜை இன்று நடைபெற்றது. இதற்காக இந்த கோவிலுக்கு வந்த இளையராஜாவை கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். அதனை அடுத்து மங்கள வாத்தியம் இசைக்க இளையராஜாவுக்கான ஆயுள் விருத்தி ஹோம பூஜை தொடங்கியது.

இந்த பூஜையில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இளையராஜாவை நேரில் பார்த்த அந்த பகுதி ரசிகர்கள் அவரிடம் ஆசி பெற்ற நிகழ்வும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.