close
Choose your channels
iruttu
Capmaari

விஜய்சேதுபதிக்கு எதிராக போராட்டம்: 200 பேர் கைது!

Tuesday, November 5, 2019 • தமிழ் Comments

நடிகர் விஜய் சேதுபதிக்கு அலுவலகத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய வணிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஆன்லைன் வணிகத்தை ஊக்கப்படுத்தும் வகையில் நடிகர் விஜய்சேதுபதி ஆன்லைன் நிறுவனத்தின் செயலியின் விளம்பரத்தில் நடித்து இருந்தார். ஏற்கனவே ஆன்லைன் வியாபாரத்தால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இது போன்ற ஒரு பிரபல நிறுவனத்தின் செயலியில் பிரபல நடிகர் ஒருவர் நடிப்பது வியாபாரிகளின் வணிகத்தை நசுக்கும் செயலாகும் என்றும், நடிகர் விஜய் சேதுபதி இந்த விளம்பரத்தில் நடித்து இருக்கக்கூடாது என்றும் வணிகர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்த செயலியின் விளம்பரத்திலிருந்து விஜய்சேதுபதி விலக வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் அமைப்பினர் இன்று சென்னை விருகம்பாகத்தில் உள்ள விஜய் சேதுபதி அலுவலகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.

இந்த போராட்டம் காரணம் அந்த பகுதியில் ஏற்பட்ட பரபரப்பை அடுத்து போராட்ட பகுதிக்கு வந்து போலீசார், போராட்டக்காரகளை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இருப்பினும் தொடர்ந்து போராட்டக்காரர்கள் விஜய்சேதுபதிக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தியதால் போராட்டம் செய்த 200 வணிகர்களை போலீசார் கைது செய்தனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz