close
Choose your channels
siren
lal_salaam

'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு.. கடைசி நேரத்தில் வந்த பரபரப்பு தகவல்..!

Thursday, November 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சரியாக இல்லை என்றும், இன்று காலை வரை முன்பதிவுகள் தொடங்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி இந்த படம் நாளை ரிலீஸ் ஆகுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய அனைத்து விதமான முயற்சிகளையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த வகையில் சற்று முன் ஒன்றாக என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் இந்த படம் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் ரிலீஸ் ஆகும் என்ற புதிய போஸ்டர் உடன் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இன்னும் ஒரு சில நிமிடங்களில் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இதுவரை ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்ற சந்தேகம் இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.