close
Choose your channels
LoveToday
CWK

வெங்கட்பிரபு - நாக சைதன்யா படத்தில் இணையும் தமிழின் முன்னணி ஹீரோ?

Friday, October 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’மாநாடு’ என்ற மாபெரும் வெற்றி படத்தை அடுத்து தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு, நாக சைதன்யா நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

நாக சைதன்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வரும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கிச்சா சுதீப் உள்ளிட்ட ஒரு சில முன்னணி நடிகர்கள் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஜீவா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உள்ளாகி வரும் உருவாகி வரும் இந்த படத்தில் நாக சைதன்யா போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.