close
Choose your channels
NMM

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரரா? செமையாய் களைகட்டும் போல?

Tuesday, October 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் 9-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த சீசனை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். மேலும் இந்த சீசன் ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை தொகுத்து வழங்கப்பட இருக்கும் நிலையில் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களின் விவரங்களை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினி, ரோஷினி, தர்ஷ குப்தா, ராஜலட்சுமி, மைனா நந்தினி, மணிகண்டன், அமுதவாணன், ஜிபி முத்து, மனிஷா யாதவ், ஷில்பா மஞ்சுநாத், ஸ்ரீப்ரியா, மன்சூரலிகான், கிறிஸ்டோபர் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த கிரிக்கெட் வீரர் யார்? என்பதை புகைப்படத்துடன் நாளை பார்ப்போம் வாருங்கள். அதுவரை சஸ்பென்ஸ் உடன் காத்திருங்கள்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.