close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகச்சிறந்த நடிகர்: விஜய்சேதுபதியை பாராட்டியது யார் தெரியுமா?

Wednesday, July 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகச் சிறந்த நடிகர் நீங்கள் தான் என விஜய்சேதுபதியை முன்னணி நடிகர் ஒருவர் பாராட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சின்னச் சின்ன வேடங்களில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் ’தென்மேற்கு பருவக்காற்று’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக நடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் தனது திறமை மற்றும் நடிப்பின் மூலம் மட்டுமே படிப்படியாக உயர்ந்தவர் விஜய் சேதுபதி. ஹீரோ வில்லன் என எந்த கேரக்டராக இருந்தாலும் இமேஜ் பார்க்காமல் ஏற்று விஜய்சேதுபதி நடித்து வருகிறார்.

முதல் முறையாக ’விக்ரம் வேதா’ என்ற திரைப்படத்தில் ஒரு முழுநீள நெகட்டிவ் கேரக்டரில் நடித்த விஜய்சேதுபதி, அதன் பின் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகியோர் திரைப் படங்களிலும் வில்லனாக மிரட்டினார்.

அதேபோல் ரொமான்ஸ் படமான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம், உணர்ச்சி பூர்வ கதை அம்சம் கொண்ட ’மாமனிதன்’ உள்பட அனைத்து தரப்பு சினிமாவிலும் நடித்து ஒரு முழுமையான நடிகர் என்ற பெயரையும் விஜய் சேதுபதி எடுத்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதிலிருந்து விஜய் சேதுபதியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஷாருக்கான் பாராட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற படத்தை பார்த்து விஜய் சேதுபதியை பாராட்டிய ஷாருக்கான், ‘இதை நான் எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. நான் உங்களை பாராட்ட போகிறேன். என் வாழ்வில் நான் பார்த்த மிகச் சிறந்த நடிகராக இருக்கிறீர்கள் என்று ஷாருக்கான் கூற, அதைக்கேட்டு விஜய்சேதுபதி இன்ப அதிர்ச்சியில் மிதந்த காட்சி அந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.