'ரெட்ரோ' வெற்றிக்கு பரிசாக கிடைத்த வைர மோதிரம்.. திருப்பி கொடுத்த சூர்யா..!


Send us your feedback to audioarticles@vaarta.com


'ரெட்ரோ’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து சூர்யாவுக்கு வைர மோதிரம் பரிசாக வழங்கப்பட்ட நிலையில், அந்த மோதிரத்தை சூர்யா திருப்பி கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ரெட்ரோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், உலகம் முழுவதும் இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னையில் இந்த படத்தின் வெற்றி விழா நடைபெற்ற நிலையில் இதில் சூர்யா உட்பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது, தமிழகம் முழுவதும் 'ரெட்ரோ’ படத்தை ரிலீஸ் செய்த சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சக்தி வேலன் சூர்யாவுக்கு வைர மோதிரத்தை பரிசாக அளித்தார். "இந்த வருடத்தில் வெளியான படங்களில் அதிக லாபம் தந்த படம் 'ரெட்ரோ’ என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி," என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், சூர்யாவுக்கு அவர் மோதிரத்தை வழங்கிய போது, அந்த மோதிரத்தை மீண்டும் அவருடைய விரலிலேயே திருப்பி போட்டு அவரை மகிழ்ச்சிப்படுத்தினார்.
இது குறித்து சக்திவேல் கூறிய போது, "என் வாழ்வில் இது ஒரு மற்றுமொரு மறக்க முடியாத நிகழ்ச்சி. ஏற்கனவே 'கடை குட்டி சிங்கம்' வெற்றி விழாவில் நான் கொடுத்த பரிசை எனக்கு திருப்பி கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தார் சூர்யா," என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com