close
Choose your channels
NMM
NMM

'வலிமை' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள்: சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

Monday, February 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் கடந்த 24ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் நான்கே நாட்களில் 100 கோடி வசூலை தாண்டிய வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்துக்கு பல விமர்சகர்கள், சமூக வலைதளத்தைச் சேர்ந்தவர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்த போதிலும் குடும்ப ஆடியன்ஸ்கள் திரை அரங்குகளில் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’வலிமை’ திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்ட காட்சிகள் இருப்பதாகவும் அந்த திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.