close
Choose your channels

நடிகை மீரா மிதுன் மீது 2 பிரிவுகளில் வழக்கு 

Tuesday, November 5, 2019 • தமிழ் Comments

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன், சமீபகாலமாக சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழக காவல்துறை, தமிழக அரசு குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை கூறினார்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் அதனால் தான் தமிழகத்தை விட்டே தான் வெளியேறி வேறு மாநிலத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்

ஒரு எதிர்க்கட்சி அரசியல்வாதி கூட இப்படி ஒரு குற்றச்சாட்டை தெரிவிக்காத நிலையில் ந்டிகை ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இந்த செய்தியாளர் சந்திப்பு முடிந்த பின்னர் அந்த ஓட்டல் நிர்வாகிகள் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை தங்களுடைய ஓட்டலில் இருந்து தெரிவிக்க வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது

இதற்கு மீராமிது ஓட்டல் நிர்வாகிகளுடன் வாக்குவாதம் செய்ததாகவும் அதனை அடுத்து ஹோட்டல் நிர்வாகிகளை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஹோட்டல் நிர்வாகி அருண் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகை மீராமிதுன் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே மீராவின் மீது இரண்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz