close
Choose your channels
siren
lal_salaam

இந்த வாரம் 6 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ்.. சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

Sunday, October 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் ஆறு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன என்பதும் ஆறு படங்களுமே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சினிமா ரசிகர்களுக்கு வரும் வாரம் கொண்டாட்டம் தான்.

முதல் கட்டமாக அக்டோபர் 6ஆம் தேதி பாரதிராஜா நடிப்பில் அவரது மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் சுசீந்திரன் தயாரிப்பில் உருவாகிய ’மார்கழி திங்கள்’ திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதால் நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த வாரம் விஜய் ஆண்டனி நடித்த ரத்தம் என்ற படம் ரிலீஸ் ஆக உள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நிச்சயம் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஏற்கனவே டீசர் மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்று ’இறுகப்பற்று’. இந்த படமும் அக்டோபர் 6ல் ரிலீஸ் ஆகிறது.

மேலும் இந்த வாரம் ரிலீஸ் ஆகும் இன்னொரு திரைப்படம் த்ரிஷா நடித்த ’தி ரோடு’. அதிரடி ஆக்சன் திரைப்படம் இந்த படம் த்ரிஷாவுக்கு நிச்சயம் இன்னொரு வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் குழந்தைகள் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ’ஷாட் பூட் த்ரி’ என்ற திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

இதையடுத்து இலங்கை முன்னாள் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’800’ என்ற படமும் இந்த வாரம் ரிலீசாக உள்ளது.

வரும் வாரம் வெளியாகவுள்ள மேற்கண்ட 6 படங்களில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பது எந்த படம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.