close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

சென்னையில் 'தி வாரியர்' புரமோஷன் நிகழ்ச்சி: கலந்து கொள்ளும் பிரமுகர்கள் யார் யார் தெரியுமா?

Wednesday, July 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’தி வாரியர்’. பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி மற்றும் கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 15ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி இன்று சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் 28 திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது வந்த தகவலின்படி இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் மணிரத்னம், பாரதிராஜா, கவுதம் மேனன், வெற்றிமாறன், சிவா, விஜய்மில்டன், வசந்தபாலன், பிஎஸ் மித்ரன், பார்த்திபன், லோகேஷ் கனகராஜ், எஸ் ஜே சூர்யா, பாலாஜி சக்திவேல், ஆகியோர்களும் விஷால், பிரபு மற்றும் கார்த்தி ஆகிய நடிகர்களும், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகளும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படக்குழுவினர்களின் லிங்குசாமி, ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி உள்ளிட்டோரும் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.