close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

200 கோடி பட்ஜெட் படத்தின் டிரைலர் ரிலீஸ்: காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் கலக்கிய நடிகை!

Thursday, June 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரூபாய் 200 கோடி பட்ஜெட்டில் தயாரான தமிழ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அந்த படத்தின் நாயகி காஞ்சிபுரம் பட்டுச் சேலையில் வந்து கலக்கிய புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

பிரபல தொழிலதிபரின் லெஜண்ட் சரவணன் அவர்கள் நடித்து தயாரித்த திரைப்படம் ’தி லெஜண்ட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்த பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா, காஞ்சிபுரம் பட்டுப்புடவை காஸ்ட்யூமில் இந்த விழாவில் கலந்து கொண்ட அசத்தினார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் காஞ்சிபுரம் பட்டு சேலையில் உலகின் மிகச் சிறந்த அழகியாக ஊர்வசி காணப்படுகிறார் என்று கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு உள்ள ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படம் பான் - இந்தியா திரைப்படமாக இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளது என்பதும் இந்தப் படத்தை பிரமாண்டமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.