close
Choose your channels
Por
Joshwa

மாண்டஸ் புயல் எதிரொலி.. 14 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Friday, December 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாண்டஸ் புயல் காரணமாக இன்று 26 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை 14 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று இரவு மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது பலத்த சூறை காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பொதுமக்கள் வீட்டை விட்டு அவசிய தேவை இன்றி வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை 14 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி,சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் மாணவ-மாணவிகள் வீட்டில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த 14 மாவட்டங்கள் தவிர மேலும் சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில மணி நேரங்களில் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.