பாலியல் வன்கொடுமையால் 11 வயது சிறுமி தற்கொலை!!! கேடுகெட்ட சம்பவத்துக்கு தாயும் உடந்தையா???
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று 11 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கிற்கான விசாரணையில் அச்சிறுமி பாலியல் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த கொடூரத்துக்கு அவரது தாயே உடந்தையாக இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதனால் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கணேசன்(32) என்ற வாலிபர் விவாகரத்தான 34 வயது பெண்ணுடன் பழகி வந்திருக்கிறார். அந்தப் பெண்ணிற்கு 11 வயதில் பெண் குழந்தையும் இருந்திருக்கிறது. இருவரும் உறவில் இருந்தபோது கணேசன் 11 வயது சிறுமியிடமும் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார். இதனால் அதிர்ந்து போன அச்சிறுமி அம்மாவிடம் சொல்லியிருக்கிறாள். ஆனால் அதற்கு அந்த தாய் கொஞ்சம் அனுசரித்துப் போ எனக் கூறியிருக்கிறாள்.
இப்படியே அந்த 11 வயது சிறுமியை கடந்த 3 மாதத்திற்கும் மேலாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார் கணேசன். கொடுமை தாங்காமல் அம்மாவிடம் கதறியிருக்கிறாள் அந்த 11 வயது சிறுமி. கொஞ்சம் பொறுத்துபோ இல்லாவிட்டால் செத்துபோ என தாய் கூற இதனால் மேலும் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் அனைத்தும் இருவரும் பேசிக்கொண்ட வாட்சப் மூலம் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் நேரில் அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டபோது இருவருமே செய்ததை ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கணேசனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கள்ளக்காதலனுக்கு உடந்தையாக இருந்த காரணத்தால் தாயையும் கைதுசெய்து திருச்சி மகளிர் காவல் நிலையத்தில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.