close
Choose your channels
Por
Joshwa

உடம்புல ரத்தம் சூடா இருக்குற வரைக்கும் தான் சண்டை செய்ய முடியும்: கருப்பர் நகரம் டீசர்..!

Thursday, November 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’அறம்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் கோபி நயினார் அடுத்த படம் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் டைட்டில் ’கருப்பர் நகரம்’ என வெளியானது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் ’கருப்பர் நகரம்’ படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்கரவர்த்தி, ஈஸ்வரி ராவ், ஜான்விஜய், டேனியல், சூப்பர் சுப்பராயன், கல்லூரி வினோத், தீபா உள்பட பலர் நடித்த இந்த படத்தை கோபி நயினார் இயக்கியுள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவில், கோபி கிருஷ்ணா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு கேஎஸ் பிரசாத் என்பவர் இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி மாதம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டீஸரில் ’உலகம் முழுவதும் ஒரே சண்டை தான் வேளாங்கண்ணி, 100 பேர் பாடுபட்டத ஒருத்தன் திங்கறதா, இல்ல 100 பேர் பாடுபட்டு 100 பேர் பங்கு போட்டுக்கிறதா என்பதுதான், உடம்புல ரத்தம் சூடா இருக்கிற வரைக்கும் தான் சண்டை செய்ய முடியும், உன் உடம்பில் ரத்தம் சூடா இருக்கு, நீ தான் செய்யணும்’ என்ற வசனத்துடன் முடியும் இந்த டீசர் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது

கோபிநாயகரின் ’அறம்’ போலவே ’கருப்பர் நகரம்’ படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.